மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 அக் 2019

நடிக்க வாய்ப்பில்லை: ரிச்சா கோபம்!

நடிக்க வாய்ப்பில்லை: ரிச்சா கோபம்!

தனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகை ரிச்சா காங்கோபதாய்

தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தின் மூலம் அறிமுகமானவர் ரிச்சா. அடுத்து தமிழில் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்த பிறகு தெலுங்கில் பிரபாஸ், ரவி தேஜா, நாகர்ஜுனா ஆகியோரது படங்களில் நடித்தார்.

பெரியளவில் பட வாய்ப்புகள் அமையாத நிலையில் அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்கச் சென்ற இவரிடம் ரசிகர் ஒருவர், மீண்டும் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில், “திரைப்படங்களில் நடிப்பதை விட்டு வெளியே வந்து 5 வருடங்கள் ஆன பின்னும் என்னுடைய அடுத்த படம் என்னவென்று கேட்பவர்களுக்கு... நான் வாழ்கையின் புதிய பகுதியில் இருக்கின்றேன். அதில் நடிப்பதற்கான லட்சியம் ஏதும் இல்லை. நான் பதில் சொன்ன பின்னும் என் மனதை மாற்றிக்கொள்வேன் என்று நினைப்பவர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நான் நடிக்க வாய்ப்பில்லை. நடிப்பதை விட்டால் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா என்று கேட்பது வெறுப்பூட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் எப்போது நடிப்பீர்கள் என்று என்று ரசிகர்கள் கேட்டதற்குக் கோபமாக பதிலளித்துள்ள ரிச்சா தன் ட்விட்டர் பக்கத்தில் தான் முன்னாள் இந்தியத் திரைப்பட நடிகை என்று பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon