மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

பழங்குடியின மக்களின் வலியைப் பேசும் ஓவியங்கள்!

பழங்குடியின மக்களின் வலியைப் பேசும் ஓவியங்கள்!

பழங்குடியின நலத் துறை அமைச்சகம் அமிர்தசரஸில் உள்ள இந்தியன் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்திவருகிறது. அக்டோபர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் ‘ஆடி சித்ரா’ என்ற தலைப்பில் பல்வேறு பழங்குடியின ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ட்ரைப்ஸ் இந்தியா அமைப்பு பழங்குடியினக் கலை மற்றும் கைவினைப் பொருள்களின் காட்சியகங்களைப் பல இடங்களில் வைத்துள்ளது. இது பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (TRIFED) கீழ் செயல்படுகிறது. சந்தைப்படுத்தும் நிறுவனமான இது பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரங்களை மேம்ம்படுத்தும் விதமாகப் பல்வேறு கண்காட்சிகளை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்திவருகிறது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழங்குடியின ஓவியங்கள் மதம், விலங்குகள், பறவைகள், திருமணம், பாதுகாப்பு போன்றவற்றின் மூலமாக வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களை முன்வைக்கின்றன. மேலும் அவை பழங்குடியினக் கலாச்சாரத்தைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிஷா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த ஓவியர்களால் இவை வரையப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் பழங்குடியின மக்களின் வலிகளைப் புரிந்துகொள்ளும் விதமாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon