மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ஆஷ்ரிதாவின் ஹை குவாலிட்டி, நியூ ட்ரெண்ட்!

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ஆஷ்ரிதாவின் ஹை குவாலிட்டி, நியூ ட்ரெண்ட்!

விளம்பரம்

“சில இடங்களில் குடிவந்தால் அந்த இடத்தோட ராசி நம்ப வாழ்க்கையை வளப்படுத்திடும்னு சொல்வாங்க. அந்த விதத்திலே கோவையிலே வேலைக்குச் சேர்ந்த பிறகு ஶ்ரீ தக்‌ஷா வில சாதாரணமான ஒரு ஃப்ளாட்டுல வாடகைக்குத்தான் குடிவந்தேன். இன்னிக்கு ‘ஶ்ரீ தக்‌ஷா’வோட ஒரு ஃப்ளாட்டுக்கு சொந்தக்காரனாகி இருக்கேன். 0கல்யாணமாச்சு. அடுத்து ஒரு குழந்தையும் பிறக்கப் போகுது. அந்த வைபவத்தையும் இந்த ஶ்ரீ தக்‌ஷா ஆஷ்ரிதா வளாகத்திலே நடத்தணும் என்கிறது என்னோட சென்டிமென்ட்டா நினைக்கிறேன்” என்ற ராஜேஷ், “இத்தனை விஷயங்கள் நடந்தும் நான் டென்ஷனே ஆனதில்லை. சுறுசுறுப்பும், முன்முயற்சியும்தான் என்னோட மூலதனம். அதைவிடவும் முக்கியமாக வேலை மற்றும் வருமானங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் கோவையில் கிடைக்கும் நிம்மதி வேறு ஊர்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை. மன அழுத்தம் இல்லாத மக்கள் வசிக்கும் ஊர் கோவைதான் சார்” என்றார்.

“பிரமாதம் தம்பி. கோவை உங்களை ரொம்ப பாதிச்சிருக்குனு நினைக்கிறேன்” என்றேன் நான்.

“பாதிக்கலை... வளர்த்திருக்கு சார். என் சொந்த ஊர்ல இருந்தப்ப கோயம்புத்தூர் எந்தப் பக்கம் இருக்குதுன்னுகூட தெரியாது. கூகுள் மேப்புல பார்த்துட்டுதான் வண்டியேறினேன். இன்னிக்கு கோவையில எல்லாமே அத்துபடி. இங்கே மட்டுமில்லை சார்... கோவையைச் சுற்றி ஏராளமான சுற்றுலா மையங்கள் இருக்கு. ஊட்டி, ஆழியார், பழநி, கொடைக்கானல், அமராவதி அணை, பரம்பிக்குளம், திருமூர்த்தி மலை, குருவாயூர், மலம்புழா, அட்டப்பாடி அமைதிப் பள்ளத்தாக்கு என பல்வேறு இடங்கள் கோவையில் இருந்து இரண்டு, மூன்று மணி நேர பயண தூரத்திலேயே போயிடலாம். நேரம் கிடைக்கும்போது நானும் போய்ட்டு வந்துடுவேன். அதனால அந்த இடங்களும் அத்துபடி ஆகிடுச்சு” என்றார்.

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது இரண்டு முக்கியமான விஷயங்கள் ஆஷ்ரிதா வின் அப்பார்ட்மென்ட்டில் கண்ணில்பட்டுக்கொண்டே இருந்தன. ஒன்று, முதல்தளத்தில் விரிந்திருந்த ஒவ்வொரு ஃப்ளாட்டுகளின் முன்பிருந்த ஏராளமான நீண்ட இடத்தில் குட்டீஸ்கள் சைக்கிள்களை ஓட்டியபடி விளையாடியது. இரண்டாவது, குட்டீஸ்கள் விளையாடிய இடத்துக்கு அருகே ஒருவர் தரையைத் தூய்மைப்படுத்தியபடி வந்தது.

அடிக்கடி என் பார்வை அங்கு சென்று வந்ததை உணர்ந்த ஆஷ்ரிதாவின் நிர்வாகி, “பசங்க விளையாடுறதைத் தடுக்க முடியாது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாள்களில் இப்படிதான். கொஞ்ச நேரத்துக்கு முன்பே மழை பெய்து அடித்த சாரல் நீர் அங்கே விழுந்திருக்கும். அதைத்தான் அவர் துடைச்சுக்கிட்டிருக்கார்” என்றார்

“கீழே அவங்களுக்கான பிளே கிரவுண்டு இருந்தாலும் இப்படி அப்பார்ட்மென்ட் புளோருக்குள்ளேயே விளையாடுறதுல அப்படி ஒரு சுகம்... பாருங்க எவ்வளவு வேகமா சைக்கிள் ஓட்டுறதை” என்ற ராஜேஷ் தொடர்ந்து, “நான் ரொம்ப நேரம் பேசிட்டேன்னு நினைக்கிறேன். நீங்க கோவையில செட்டில் ஆகணும் நினைக்கிறதாலேதான் இவ்வளவு விஷயத்தையும் என்னோட அனுபவத்தையும் சேர்த்துக் கொட்டிட்டு இருக்கேன். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிடறேன்” என்று ‘ஶ்ரீ தக்‌ஷா’வின் ஆஷ்ரிதா வளாகத்தின் மார்க்கெட்டிங் மானேஜரைப் பார்த்தார்.

அவர், “எந்த குறையின்னாலும் சொல்லுங்க... பரவாயில்லை” என்றார்.

“சாரி ஸார். என்னை தப்பா நினைச்சுட்டீங்க பார்த்தீங்களா... எந்த குறையின்னாலும் உங்ககிட்டே சொல்லப் போறேன். எதை உடனே நிறைவேத்திடப் போறீங்க. இந்த இடத்திலே குறை என்கிற சொல்லுக்கே இடமில்லை. அப்படியே நான் குறைன்னு சொன்னாலும் இவங்க நேர்ல பார்க்கிற விஷயத்தை வெச்சு நான் சொல்றது பொய்ன்னு நினைக்க மாட்டாங்களா?

ரெண்டு வருஷத்துக்கு முன்பு நான் வாடகைக்குக் குடியிருந்த ‘ஶ்ரீ தக்‌ஷா’வோட ஃப்ளாட் பிடிச்சுப்போய்தான் இந்த ஃப்ளாட்டைச் சொந்தமா வாங்கியிருக்கேன். இந்த ‘ஶ்ரீ தக்‌ஷா’ ஆஷ்ரிதா வளாகத்திலே நுழைந்தபோதே நான் வாடகைக்கு இருந்த அப்பார்ட்மென்ட்டை விட பிரமாதமான கட்டமைப்பிலே இருந்தது. குறிப்பா, இந்த அப்பார்ட்மென்ட்டுல உள்ள நாலு பிளோர்ல ஒரு பிளோருக்கு 18 ஃப்ளாட் விதமா மொத்தம் 72 ஃப்ளாட்ஸ் இருக்கு. இங்கே இருக்கிற ஒவ்வொரு ஃப்ளாட்டுக்குள்ளேயும் ஏதோ ஒரு வேளையிலே சூரிய ஒளியும், எப்போதும் வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்கும். அந்த மாதிரியான அமைப்புலே கட்டியிருக்காங்க சார்” என்று அவர் சொன்னபோதுதான் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வீசிய தூய்மையான காற்றையும், சற்று நேரத்துக்கு முன் மழை பெய்து விலகியிருந்த மேகங்களுக்கு இடையே தெரிந்த சூரிய ஒளியையும் உணர்ந்தேன்.

“இந்த ‘ஶ்ரீ தக்‌ஷா’வின் ஆஷ்ரிதா வளாகத்தைப் பொறுத்தவரை இங்குள்ள வில்லாக்களிலும் அப்பார்ட்மென்ட் ஃப்ளாட்டுகளிலும் பில்டிங் கட்டும்போது எந்த சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் ஹை குவாலிட்டியோட நியூ ட்ரெண்ட்டோட கட்டியிருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்றேன்.

“நூத்துக்கு நூறு உண்மை சார்” என்ற ராஜேஷ், “எல்லாரும் வாங்களேன். சாப்பாட்டு நேரமாச்சு. எங்க வீட்டுல சாப்பிடலாம்” என்று அழைத்தார்.

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon