மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 7 டிச 2019

இப்படியும் ஒரு விநோத நோய்!

இப்படியும் ஒரு விநோத நோய்!

நாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு விநோத நோய் செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜனா டானிலோவிக் என்ற பெண்மணிக்கு உள்ளது. மற்ற எல்லோரையும் போல சாதாரணமாகக் காட்சியளித்தாலும், உலகில் உள்ள மற்ற அனைத்து மனிதர்களையும் விட வித்தியாசமானவர் போஜனா. நாம் எல்லோராலும் காட்சிகளை நேராகப் பார்க்க முடிகிறது. ஆனால் போஜனாவுக்கு அப்படி காட்சிகள் நேராகத் தெரிவதில்லை, தலைகீழாகத்தான் தெரிகிறது. இவரால் எந்தக் காட்சியையும், எழுத்துகளையும், சம்பவங்களையும் நேராகப் பார்க்க முடியாது. அனைத்துமே தலைகீழாகத்தான் தெரியும்.

இவ்வாறு தலைகீழாக தெரிவதால் கண்களில் குறைபாடு இருக்குமா என்று போஜனாவின் கண்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கண்களில் எந்தக் குறைபாடும் இல்லை என்பதை அறிவித்துவிட்டனர். இப்பெண்ணின் மூளைதான் இவர் பார்க்கும் காட்சிகளைத் தலைகீழாகப் புரிந்துகொள்கிறது என்றார்.

28 வயதான இப்பெண், வேலை தேடுபவர்களுக்கு உதவும் அமைப்பில் தற்போது பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் இவர் பயன்படுத்தும் கணினித்திரை மட்டும் தலைகீழாக இருக்கிறது. மேலும் வீட்டிலும், தொலைக்காட்சியின் காட்சிகளை தலைகீழாகக் காட்டும் கண்ணாடி வழியாகவே இவர் திரைப்படங்களையும் நிகழ்வுகளையும் கண்டுகளிக்கிறார். போஜனாவின் இந்த விநோதமான குறைபாட்டுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இக்குறைபாடு, ‘ஸ்பேட்டியல் ஒரியன்டேஷன் பினாமினன்’ என்று அழைக்கப்படுகிறது. இப்படியும் ஒரு விநோத நோய்!

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது