மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

சிவகார்த்தி Vs சந்தானம்: எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

சிவகார்த்தி Vs சந்தானம்: எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

சந்தானம் நடிப்பில் சக்க போடு போடு ராஜா, சிவகர்த்திகேயனின் வேலைக்காரன் என இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் சக்க போடு போடு ராஜா. சேதுராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளது.

நடிகர் சிம்பு இசையமைத்துள்ள இப்படத்துக்காக அனிருத் பாடிய கலக்கு மச்சான் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடிய காதல் தேவதை பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

இந்த நிலையில் தற்போது படத்தை வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதே நாளில், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படமும் ரிலீஸாகிறதென்பது தெரிந்த தகவல். ஏற்கெனவே கடந்த தீபாவளியன்று விஜய் நடிப்பில் பைரவா வெளிவந்த நாளில் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படமும் வெளிவரும் என்று கூறப்பட்டு, பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சக்க போடு போடு ராஜா படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ள இந்தப் படத்தை விடிவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் விடிவி.கணேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon