மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

பாடலை நம்பும் பூஜா ஹெக்டே

பாடலை நம்பும் பூஜா ஹெக்டே

‘துவ்வடா ஜகன்னாதம்’ படத்தின் மூலம் தெலுங்கில் ரீஎன்ட்ரியான நடிகை பூஜா ஹெக்டே, ‘எனக்கு நடிப்பு கைகொடுக்காவிட்டாலும் பாடல் கைகொடுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிப்பது மிகவும் பிடித்தமான விஷயம் என்றாலும் தொடர்ந்து அதையே செய்துகொண்டிருக்கும்போது நடிகர்களின் வாழ்க்கை சலிப்பான ஒன்றாக மாறிவிடுகிறது என்று டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள பூஜா ஹெக்டே, “ரசிகர்கள் அனைவரும் என்னை புதிய தோற்றத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். என்னை அழகான பெண்ணாக மட்டும் பார்ப்பதை நான் விரும்பவில்லை. என்னைப் பற்றிய மாறுபட்ட நல்ல கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன். கவர்ச்சி என்பது ஒருவரின் மனப்பான்மையைப் பொறுத்து மாறுபடும். ஒரு டி-சர்ட்டும், அரைக்கால் சட்டையும் அணிந்துவிட்டால் மட்டும் கவர்ச்சி என்று ஆகிவிடாது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “எனக்கு நடிப்பு கைகொடுக்காவிட்டாலும் பாடல் கைகொடுக்கும். தற்போது கிட்டார் இசைத்துக்கொண்டே பாடக் கற்று வருகிறேன். இப்படி புதிதாக என்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ளும்போது அது என்னுடைய வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்று நம்புகிறேன். இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச வந்தலும் தாய்மொழியான துளுவையும் கற்று வருகிறேன். தெலுங்கில் சில காலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளதால் தெலுங்கும் சற்று மறந்துவிட்டது. அதையும் தற்போது கற்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon