மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 நவ 2017

28 வருட மாற்றம்: நாகர்ஜுனா

28 வருட மாற்றம்: நாகர்ஜுனா

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் ஓம்கார் இயக்கத்தில் நடிகர் நாகர்ஜுனா நடித்து சமீபத்தில் வெளியான படம் ராஜூ காரி கதி 2 . இதையடுத்து நாகர்ஜுனா நடிக்கவுள்ள புதிய படத்தை ராம்கோபால் வர்மா இயக்கவிருக்கிறார். இதற்கு முன்பு நாகர்ஜுனா – ராம்கோபால் வர்மா காம்போவில் வெளியான கோவிந்தா கோவிந்தா, அந்தம், சிவா ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி’ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதில் நாகர்ஜுனா போலீஸாக நடிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இதன் ஷூட்டிங் நேற்று (நவம்பர் 20ஆம் தேதி) முதல் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் நாகர்ஜுனா தன் ட்விட்டர் பக்கத்தில், “28 வருடங்களுக்கு முன்பு சிவா படம் என் வாழ்க்கையை மாற்றியது. தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிப்பதைப்பற்றி வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. நான் ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon