மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

பியூட்டி ப்ரியா - கண்ணே கண்ணே!

பியூட்டி ப்ரியா - கண்ணே கண்ணே!

"கருமேகத்தினுள் இருந்து வெளியான

இரு நிலவுகளை ஒரே நேரத்தில் நீ

இமை திறந்தபொழுதினில் பார்க்கிறேன்" என்று கொஞ்சிடும் அழகுபெற்ற கண்களை உடையவரா நீங்கள். பாக்கியசாலிதான். ஆனால், அதை மேலும் தக்கவைத்துக் கொள்வதில்தான் சாதுர்யம் இருக்கிறது.

கண் புருவம், இமைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணைக் கவர்ச்சியாகத் தெரியவைக்கும்.

புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்துக்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள்.

அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால், மற்ற நேரங்களில் அது முகத்துக்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் அழகாக பெரிதும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும் காய்கனிகளான கேரட், ஆரஞ்சு, பால், திராட்சை, முட்டை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமுடனும் அழகுடனும் இருக்கும்.

இரவில் படுக்கும் முன், கண்களுக்கு மை தீட்டும் பழக்கம் உள்ளவர்கள் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இல்லாவிட்டால் கண் மையில் இருக்கும் ரசாயனப் பொருள்கள் கண்களில் தங்கி, கெடுதலை ஏற்படுத்தும்.

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, மறக்காமல் முகத்தையும், கண்களையும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகத்தில் மற்றும் கண்களில் இருக்கும் தூசிகள் வெளியேறி கண்கள் பாதுகாப்புடன் இருக்கும்.

கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க, வெள்ளரிக்காயின் சதைப்பகுதியை எடுத்து கண்களை மூடிக்கொண்டு வைத்து, 10 நிமிடங்கள் கழித்து எடுத்து விடவும். இதை தினமும் செய்து வந்தால், கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு சோர்வு இல்லாமல், கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும், கருவளையமும் நீங்கும்.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், கண்கள் சோர்வடையும் நேரத்தில் 10 நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து, பின் வேலை செய்தால் கண்கள் புத்துணர்ச்சிப் பெறும்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon