மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

வோடஃபோனின் தினசரி டேட்டா சலுகைகள்!

வோடஃபோனின் தினசரி டேட்டா சலுகைகள்!

இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கவும், ஜியோவுக்கு ஈடாகவும் தங்களது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஐந்து புதிய திட்டங்களை வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான வோடஃபோன், கடந்த ஓர் ஆண்டாகவே கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. மேலும், தனது நீண்ட நாள் வாடிக்கையாளர்களையும் இழந்து வருவதோடு, புதிய வாடிக்கையாளர்களைத் தனது சேவைக்குள் இணைக்க முடியாமலும் தவித்து வருகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சேவையில் குறைந்த கட்டணத்தில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருவதால் வோடஃபோன் உள்ளிட்ட பிற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு மாறி வருகின்றனர். எனவே கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து இழந்த வாடிக்கையாளர்களை மீட்கவும், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும் வோடஃபோன் முயன்று வருகிறது.

அதன்படி, ஐந்து புதிய திட்டங்களை வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.349 திட்டத்தில் 28 நாள்களுக்குத் தினசரி 1.5 ஜி.பி. அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.458 திட்டத்தில் 70 நாள்களுக்குத் தினசரி 1 ஜி.பி. அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்பு வசதியும் உள்ளது. ரூ.509 திட்டத்தில் 84 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியுடன் தினசரி 1 ஜி.பி. அளவிலான 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.196 திட்டத்தில் 28 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டா கிடைக்கும். மேலும், ரூ.81 திட்டத்தில் 7 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியுடன் 500 எம்.பி. டேட்டா வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon