மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா - அவல் இனிப்பு பணியாரம்!

கிச்சன் கீர்த்தனா - அவல் இனிப்பு பணியாரம்!

‘அவள்கூட அவலுக்கு மாறிவிட்டாள்’ என்று முகநூலில் ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். என்னவென விசாரித்ததில் டீ, காபி, பால் இவற்றை தவிர்த்தலைப்போல் அரிசி உணவையும் தவிர்த்துவிட்டு அவல் போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவருடைய காதலியும் அவல் சாப்பிட தொடங்கிவிட்டதை அப்படி எழுதியிருக்கிறார். அர்த்தம் கேட்டது ஒரு குத்தமா? உடனே அவலில் ஒரு பதார்த்தம் சொல்லுங்களேன் கீர்த்தனா என கேட்க... உதயமானது அவல் இனிப்பு பணியாரம்.

தேவையானவை:

பச்சரிசி - 1 கப், அவல் - அரை கப், வெல்லம் - ஒன்றரை கப், நல்லெண்ணெய் - சுடுவதற்கு, ஏலக்காய் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

அவலையும், அரிசியையும் நன்றாகக் கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும். இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர்விட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தைப் போட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். பிறகு ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.

பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவுக்கு மாவை ஊற்றவும். மாவு அடிப்பகுதியில் வெந்ததும், ஸ்பூனை வைத்து திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

போன வருஷம் இந்நேரம் #அம்மாவுக்கு (JJ) உயிர் இருக்கான்னு பேசிட்டு இருந்தாய்ங்க.

இப்போ உயில் இருக்கான்னு அஞ்சு நாளா தேடிக்கிட்டு இருக்காய்ங்க!

இவ்ளோதான் சார் வாழ்க்கை...

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon