மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஒரே மேடையில் 5,625 நாட்டியக் கலைஞர்கள்!

ஒரே மேடையில் 5,625  நாட்டியக் கலைஞர்கள்!

புதுச்சேரியில் உலக சாதனை முயற்சியாக ஒரே மேடையில் 5,625 நடன கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர்.

நேற்று முன்தினம் (நவம்பர் 19) புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் “பசுமை இந்தியா” என்ற தலைப்பில் 5,625 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். அதில் 5 வயது முதல் 86 வயது வரையிலான அனைத்து நடன கலைஞர்களும் கலந்து கொண்டனர். இதில் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்தும் தாய்லாந்து மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் நடனக் கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் திருநங்கைகள், மாற்றுத் திறனாளி நடனக் கலைஞர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

முன்பாக 4,525 நடன கலைஞர்கள் கலந்துகொண்டது உலகச் சாதனையாக இருந்தது. தற்போது அதை முறியடிக்கும் வகையில் புதுச்சேரியில் நேற்று முன்தினம் 5,625 நாட்டிய கலைஞர்கள் 26 நிமிடம் 2 வினாடிகள் தொடர்ந்து நடனமாடினார்கள். நிகழ்ச்சியில் அனைத்து நடன ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி, பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தனர். இந்நிகழ்வு உலக சாதனை பட்டியலில் இடம்பெற ஒரு முயற்சியாக இருந்தது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon