மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

காதலுக்கு அர்த்தம் தேடுகிறேன்!

காதலுக்கு அர்த்தம் தேடுகிறேன்!

‘காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலனுக்காக உலகம் முழுவதும் இயங்கிவரும் அமைப்பு யுனிசெஃப். இந்த அமைப்பின் செலிப்ரிட்டி அட்வகேட்டாக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் த்ரிஷா, அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து, குழந்தைகளுக்குத் தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரமொன்றில் நடித்திருந்தார். இத்தகைய காரணங்களால் தற்போது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான செலிப்ரிட்டி அட்வகேட்டாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் யுனிசெஃப் சார்பில் குழந்தைகள் தின விழா நேற்று (நவம்பர் 20) நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய த்ரிஷா, “உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டியது. நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் கொடுமைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும். நான் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த விரும்புகிறேன். பெண் குழந்தைகளுக்குப் படிப்பு மிக அவசியம். அவர்கள் படிப்பதனால் நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

அவரிடம் காதல் சம்பந்தமான கேள்வி முன்வைக்கப்பட்ட போது, “காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நானும் அகராதியில் தேடிக்கொண்டு இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon