மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

மல்லையாவுக்கு இந்தியாவில் என்ன பாதுகாப்பு?

மல்லையாவுக்கு இந்தியாவில் என்ன பாதுகாப்பு?

விஜய் மல்லையாவுக்கு இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து லண்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

அவர் இந்தியாவில் இருந்தபோது கிங்ஃபிஷர் நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்த 2 லட்சம் டாலர் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் கை மாறியதாக அமலாக்கத் துறையால் வழக்குத் தொடரப்பட்டது. இந்த பெரா வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு அமலாக்கத் துறை பலமுறை அழைத்தும் மல்லையா இந்தியா வரவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டுமென்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஆஜராகவில்லையென்றால் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் மல்லையா இந்தியா வந்தால் அவருக்குச் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அரசுக்கு லண்டன் நீதிமன்றம் கேட்டுள்ளது. விசாரணைக்காக இந்தியா சென்றால் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து லண்டன் நீதிமன்றம் இந்திய அரசிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon