மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

தமிழகம்: குறையும் சிமென்ட் விலை!

தமிழகம்: குறையும் சிமென்ட் விலை!

போதிய பருவமழை இல்லாமை மற்றும் மணல் சுரங்கங்கள்மீது விதிக்கப்பட்ட தடை போன்ற காரணங்களால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரையில் விலை குறைந்துள்ளது.

தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க மணல் சுரங்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் அக்டோபர் மாதத்தில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.16 வரையில் குறைந்தது. அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் சிமென்ட்டுக்கான தேவை முந்தைய ஆண்டை விட 26 சதவிகிதம் குறைந்து போனது. மழைப் பொழிவு இல்லாமல் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் சிமென்ட் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் காணப்பட்ட விலைச் சரிவு இம்மாதத்திலும் நீடித்து, மூட்டை ஒன்றின் விலை ரூ.332 ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சிமென்ட் விலை குறைந்துள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.13 வரையில் குறைந்துள்ளது. குறிப்பாகப் பெங்களூருவில் சிமென்ட் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது. எனினும், அதிகரித்துவரும் தேவை காரணமாக, வரும் மாதங்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிமென்ட் விலை ரூ.15 முதல் ரூ.20 வரையிலும், கர்நாடகாவில் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் விலை உயரும் என்று சிமென்ட் உற்பத்தித் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதே விலை நிலவரம் நீடிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon