மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 நவ 2017

‘டிக் டிக் டிக்’: புதிய அப்டேட்!

‘டிக் டிக் டிக்’: புதிய அப்டேட்!

முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாகப் பரபரப்பை ஏற்படுத்திய ‘டிக் டிக் டிக்’ படக்குழுவினர் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் டிக் டிக் டிக். இந்தப் படம் விண்வெளி பயணத்தை மையமாகக்கொண்டு இந்தியாவில் எடுக்கப்படும் முதல் படமாகும். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவர்களுடன் ஆரோன் ஆசிஸ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுதந்திரத் தினத்தன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகி 37 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லரை நவம்பர் 24ஆம் தேதி வெளியிட இருப்பதாக ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் விரைவில் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon