மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

இந்த மெசேஜ் வந்தது கையறு நிலை. எதுவும் கருத்து சொல்ல முடியலையேன்னு. ஏன்னா இப்பதான் டேக் பண்ணா அரிவாளால வெட்டுறாங்களாம். ட்விட்டர்ல ரீட்விட் பண்ணா அபராதம் போடுறாங்களாம். ‘அவங்கள’ பத்தி சொன்னா ஜெயில்ல போடுறாங்களாம். அதனால பயமா இருக்கு. அச்சச்சோ... நானே லீட் எடுத்து குடுத்துட்டனே. இத வெச்சே ஒரு மெசேஜ் எழுதி உடனே பகிரவும்னு சொல்வாங்களே... சரி... அந்தக் கருத்து கூற முடியாத அந்த மெசேஜ் என்னவென்று பார்ப்போமா...

ஜட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்?

விண்ணப்பதாரர்: ஐயா... என் மனைவி என்னைத் தினமும் பூண்டு உரிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள். பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. அதனால் விவாகரத்து தாருங்கள்.

ஜட்ஜ்: இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது.

உரிக்க வேண்டிய வெங்காயத்தைப் பத்து நிமிடங்கள் பிரிஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் வெட்டும்போது கண்ணிலும் தண்ணீர் வராது.

பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது.

அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிப்பட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுன்னு ஆயிடும்.

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி, நல்ல தண்ணியில ஒரு தடவை நனைக்கணும். அதன்பின் சர்ப்ல ஊற வைச்சு மிஷின்ல போட்டா, துணி தும்பப்பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கெல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...

விண்ணப்பதாரர்: ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

ஜட்ஜ்: என்ன புரிஞ்சது?

விண்ணப்பதாரர்: எம் பொண்டாட்டி பூண்டு, வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா... ஆனா, நீங்க துணியும் துவைக்கிறீங்க.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon