மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

கூகுள் லென்ஸ்: கனவு நினைவானதா?

கூகுள் லென்ஸ்: கனவு நினைவானதா?

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சிறந்த அப்ளிகேஷன்களில் கூகுள் லென்ஸ் மிகவும் முக்கியமான ஒன்று. அதன் வெளியீட்டினை கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கூகுள் நிறுவனம் தற்போது உலகின் முதல் தேடுதளமாக மாறி உள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான ஒரு தகவலை இணையத்தில் பெற முதலில் அவர்கள் பயன்படுத்துவது கூகுள் தேடலைத்தான். அதேபோல் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு அப்ளிகேஷன்கள் பயனர்களின் அன்றாட வாழ்வில் உதவியாக செயல்பட்டு வருகின்றன. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு os தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி ஸ்மார்ட் கருவிகளை உருவாக்கிவரும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் கிளாஸ் ஒன்றை அறிமுகம் செய்தது.

அதன் தொடர்ச்சியாக கூகுள் லென்ஸ் என்ற அப்ளிகேஷனைத் தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மாதிரியை பல வருடங்களுக்கு முன்னரே கூகுள் நிறுவனம் வெளியிட்டது. அப்போது பல நபர்களும் இது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பினர். தற்போது அதன் வெளியீடு அந்த கேள்விகளுக்குப் பதில் தரும் விதத்தில் அமைந்துள்ளது. கூகுள் லென்ஸ் அப்ளிகேஷனானது கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களான Pixels மற்றும் Pixels 2 ஆகிய மாடல்களில் மட்டும் வெளியாகி உள்ளது. விரைவில் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அப்ளிகேஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூகுள் லென்ஸ் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை கேமராவின் வசதியுடன் பெற முடியும். அதாவது ஒரு பொருள் குறித்த தகவல் தேவைப்படும்போது கூகுள் லென்ஸ் என்ற வசதியை கேமராவில் ஆன் செய்து அதைப் புகைப்படம் எடுத்தால் போதுமானது. அதுமட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட பலகையில் உள்ள எழுத்துகளைப் புகைப்படம் எடுப்பதன் மூலம், அவற்றை ஸ்கேன் செய்து அதன் விவரங்களை அறிந்திட உதவுகிறது. கூகுள் நிறுவனம் பல்வேறு தகவல்களைக் கொண்ட சர்வர்களைக்கொண்டு செயல்படுகிறது. எனவே நமக்குத் தேவையான பல்வேறு தகவல்களை மிகவும் எளிய முறையில் பெற்றுக்கொள்ள முடிகிறது.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon