‘கீழடியில் 4ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி கட்டாயம் தொடங்கும்’ என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி வளாகத்தில் செய்தியாளர்களை நேற்று (நவம்பர் 20) சந்தித்த அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், கீழடியில் 4ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி கட்டாயம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய, தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கும் 600க்கும் மேற்பட்டோர் நிதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீதத் தொகையை தமிழக அரசு வழங்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ஊர் கூடித் தேர் இழுக்கும் பணி இது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மகாத்மா காந்தியின் ஆங்கிலப் படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.