மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

சந்தானத்துடன் ஜோடி சேரும் அதிதி ராவ்

சந்தானத்துடன் ஜோடி சேரும் அதிதி ராவ்

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ். இவர் தற்போது சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்திக் குறிப்பில், அதிதியிடம் இப்படத்தின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளதாகவும் ஆனால் அவர் இப்படத்திற்கான ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் தற்போது சக்க போடு போடு ராஜா படத்தில் கவனம் செலுத்திவருகிறார். ஜி.எல்.சேதுராமன் இயக்கும் இப்படத்தில் வைபவி சாண்டில்யா, விவேக், விடிவி கணேஷ், சஞ்சனா சிங், பவர் ஸ்டார் சீனிவாசன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். இதன் படவேலைகள் முடிந்த பிறகே ராஜேஷ் இயக்கும் தன் அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon