மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் ரிசல்ட்!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் ரிசல்ட்!

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு மறுகூட்டல் முடிவு இன்று (நவம்பர் 21) வெளியாகிறது.

“செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணை தேர்வில் 22, 665 தனித் தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டன. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 31ஆம் தேதி மற்றும் நவம்பர் 1ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், மறு கூட்டலில் இருதாள்கள் கொண்ட மொழி பாடத்துக்கு 305 ரூபாயும், கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாடத்துக்கு 205 ரூபாயும், விருப்ப மொழி பாடத்துக்கு 205 ரூபாயும் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 184 பேர், பல்வேறு பாடங்களில், 383 விடைத்தாள்களில் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர். இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறியுள்ளது. அவர்கள், தற்காலிகச் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்” என தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon