மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!

கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகக் கரைக்கு திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று இரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இன்று (நவம்பர் 21) அதிகாலை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

அத்துடன் மீனவ படகுகளில் ஏறி வலைகளை வெட்டி எரிந்ததுடன், பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்து, இங்கே மீன் பிடிக்க அனுமதி இல்லை என்று மீனவர்களை விரட்டியுள்ளனர். இதனால் உயிருக்குப் பயந்து அவசர அவசரமாக மீனவர்கள் கரைக்கு திரும்பியுள்ளனர்.

“ஒவ்வொரு முறையும் கடலுக்குள் செல்லும் போது அச்சத்துடனே செல்ல வேண்டியிருக்கிறது. ராமேஸ்வர மீனவர்களைக் கைது செய்வதும். விரட்டியடிப்பதும் இலங்கை கடற்படையினரின் வாடிக்கையாக உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

கடந்த வாரம் முதல் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் கூட உயிருக்குப் பயந்து வெறும் கையோடு கரை திரும்பினோம் என்று வேதனையுடன் கூறினார் பாதிக்கப்பட்ட மீனவர்களுள் ஒருவர்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon