மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 7 டிச 2019

ஐஸ்வர்யா பயத்திற்கு என்ன காரணம்?

ஐஸ்வர்யா பயத்திற்கு என்ன காரணம்?

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாள, இந்தி திரையுலகிலும் அழுத்தமான தடம் பதித்துள்ளார். இருப்பினும் புதிய படங்களில் ஒப்பந்தமாகும் போது ஒரு பயம் தன்னை ஆட்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான வேடங்கள் ஏற்று நடிக்கும் ஐஸ்வர்யாவின் கனவு ரோல் என்ன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு எந்த கனவு ரோல்களும் இல்லை. நான் நடிக்கும் எல்லா பாத்திரங்களையும் கனவு ரோல்களாக நினைத்தே செய்கிறேன். ஏனெனில் புதிய படங்களில் ஒப்பந்தமாகி படப்பிடிப்புக்கு செல்லும் போது ஒருவித நடுக்கம் ஏற்படுகிறது. எனக்கு ஏற்படும் இந்த பயத்திற்கு காரணம் நான் வசனங்களை சரியாக பேசுகிறேனா உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்துகிறேனா என்ற சந்தேகம் தான். ஆனால் இவை இரண்டு மூன்று நாள்களில் சரியாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

எந்தெந்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, “மணிரத்னம் சாருடன் இணைந்து பணியாற்றுவது விருப்பமாக இருந்தது, அது விரைவில் நடைபெறப் போகிறது. கரண் ஜோகர் படத்தில் நடிக்கவேண்டும். நான் இப்போது பாலிவுட்டிலும் நடிப்பதால் அவரது பெயரையும் சேர்த்து சொல்லலாம். காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் சாருடன் இணைந்து மீண்டும் பணியாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon