மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 14 அக் 2019

ரூ.74,090 கோடிக்கு கார்டு பரிவர்த்தனை!

ரூ.74,090 கோடிக்கு கார்டு பரிவர்த்தனை!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் கார்டு பரிவர்த்தனைகள் 84 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பாவின் பரிவர்த்தனை சேவைகள் நிறுவனமான ’வேர்ல்டு வொய்டு’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த செப்டம்பர் மாத்தில் இந்தியாவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பு ரூ.74,090 கோடியாக உள்ளது. இது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத அளவுடன் ஒப்பிடும் போது 84 சதவிகிதம் கூடுதலாகும். அதாவது. 2016 செப்டம்பரில் ரூ.40,130 கோடி மதிப்பிலான கார்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும், ’பாயின்ட் ஆஃப் சேல்’ அல்லது ஸ்வைப்பிங் மெஷின்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு 86 சதவிகிதம் உயர்ந்து ரூ.37.8 கோடியாக உள்ளது. 2016 செப்டம்பரில் இதன் மதிப்பு ரூ.20.3 கோடியாக இருந்தது.

பயன்பாட்டில் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், 2017 செப்டம்பரில் 85.30 கோடி கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை மட்டும் 3.33 கோடி; மற்றும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 81.98 கோடியாகும். 2015ஆம் ஆண்டில் ’ஜன் தன் யோஜனா’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது டெபிட் கார்டுகளின் பயன்பாடு 39 சதவிகிதம் உயர்ந்தது. இந்நிலையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு அதன் சராசரி பயன்பாட்டு அளவு 22 சதவிகிதமாக உள்ளது. அதேபோல, கிரெடிட் கார்டு பயன்பாடு 2016 முதல் 2017 வரை 24 சதவிகிதமாக உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon