மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

மீண்டும் தேர்தல் களம் :கார்த்தி

மீண்டும் தேர்தல் களம் :கார்த்தி

நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் எங்கள் அணி போட்டியிடும் என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படம் நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது. பவாரிய கொள்ளைக் கூட்டத்தை பிடிக்கத் தமிழக காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் குவித்து வருகிறது.

படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட கார்த்தி மற்றும் படக்குழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (நவம்பர் 20) மாலை நெல்லையில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி, “இந்த வெற்றி எங்கள் குழுவின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவரிடம் நடிகர் சங்க கட்டிடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் சங்க கட்டிடப் பணிகள் தற்போது தொடங்கி விட்டது. அடுத்த ஆண்டுக்குள் கட்டிடப்பணிகள் நிறைவடையும். மேலும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற இன்னும் சில கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலிலும் எங்கள் அணி போட்டியிடும்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon