மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

மோடிக்கு எதிராக குரலெழுப்பினால்..?

மோடிக்கு எதிராக குரலெழுப்பினால்..?வெற்றிநடை போடும் தமிழகம்

பாட்னாவில் நடந்த விழாவொன்றில் பேசிய பிகார் பாஜக தலைவர் நித்யானந்த் ராய், “மோடிக்கு எதிராக விரல்களோ, கையோ உயர்ந்தால், அதனை முறிக்க வேண்டும் அல்லது வெட்ட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

பிகார் தலைநகர் பாட்னாவில், வைஸ்யா மற்றும் காணு சமுதாயங்களின் சார்பில் விழா நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, மத்திய அமைச்சர்கள் நந்தகுமார் கிஷோர், பிரேம்குமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய பிகார் மாநில பாஜக தலைவரும், உஜியார்பூர் எம்.பி.யுமான நித்யானந்த் ராய், “ஏழ்மையான பின்னணியில் இருந்துவந்து, இன்று நாட்டின் பிரதமராகியிருக்கும் நரேந்திர மோடியைக் கண்டு, நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்” என்றார்.

அதன் பிறகு “மோடிக்கு எதிராக விரல்களோ, கையோ உயர்த்தப்பட்டால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அதனை முறிக்க வேண்டும் அல்லது வெட்ட வேண்டும்” என்றார். கூடவே, “எந்தவொரு தனி மனிதரையோ அல்லது எதிர்கட்சிகளையோ மனதில் வைத்துக்கொண்டு, இதனை நான் சொல்லவில்லை. இந்த நாட்டின் பெருமைக்கும் பாதுகாப்புக்கும் எதிராகப் பேசுபவர்களையே கண்டிக்கிறேன்” என்றிருக்கிறார்.

எல்லாக் கட்சிகளிலும் எல்லைமீறிப் பேசும் பேச்சாளர்கள் உண்டு. அவர்களைக் கட்சித் தலைமை கட்டுப்படுத்தும். ஆனால், ஒரு கட்சியின் மாநிலத் தலைவரே இவ்வாறு பேசுவதை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது? இந்த வகையிலேயே, பீகார் மாநில பாஜக தலைவரான நித்யானந்த் ராயின் பேச்சு நாடெங்கும் கவனம் பெற்றுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon