மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

இசையமைப்பாளரின் பயணம்!

இசையமைப்பாளரின் பயணம்!

மின்னம்பலம்

ஏமாலி, சுவாதி கொலை வழக்கு, திருப்பதிசாமி குடும்பம் ஆகிய படங்களின் இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் தனது திரையுலக நுழைவு குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷாம், “துபாயில் புகழ்பெற்ற கடற்கரை உணவகத்தில் பியானிஸ்டாக வேலைபார்த்தேன். அதன் பின் எனக்கென ஒரு ஸ்டுடியோவையும் ஜாஸ் இசைக்குழுவையும் தொடங்கினேன். பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கினேன். அவை ஜப்பான், சீனா, பூட்டான் ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் எனது இசைக் குழுவோடு உலகம் முழுவதும் சென்று கச்சேரி நடத்தினேன்” என்று தனது இசைப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

சுயாதீன இசைக் கலைஞராக இருந்த ஷாம் திரையுலகிற்குள் வந்ததைப் பற்றிக் கூறும்போது, “ஏமாலி படத்தின் இயக்குநர் வி.இஸட்.துரையுடன் நிறைய விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் மூலமாகத் திரைத் துறைக்குள் நுழைந்தேன்” என்று தெரிவித்தார்.

ஷாம், நெட் பிளிக்ஸ் உடன் இணைந்து தென்னிந்திய பார்வையாளர்களுக்காகச் சில வீடியோக்களை செய்ய திட்டமிட்டுள்ளார். “சில வெப் சீரிஸ்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். நான் அவர்களோடு திரைத் துறை பற்றி ஆலோசனை செய்வேன். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நெட்பிளிக்ஸுக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன். ஏனெனில் தங்களது கதைகளைச் சரியான இடத்தில் கூறுவதற்கான விழிப்புணர்வு இல்லாமல் பல கலைஞர்கள் இங்கு உள்ளனர்” என்று கூறிய ஷாம், ஏமாலி படத்தின் வெளியீட்டிற்குப் பின்னரே அடுத்த படத்தில் கையெழுத்திடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon