மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

கிரீம்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு!

கிரீம்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு!

நீர்வழி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையாகப் பெருநகர சென்னை மாகராட்சி நிர்வாகம் கூவம், அடையாறு ஆற்றுப்படுகையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாகச் சென்னை, கிரீம்ஸ் சாலை திடீர் நகர் பகுதியில் கூவம் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று நவ.20 அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அளித்தனர். திடீர் நகரில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நோட்டீஸ் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று அவர்களைச் சமாதானம் செய்தனர். வீடுகளைக் காலி செய்யும் குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளும் பிற சலுகைகளும் அளிக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். எனினும் மக்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (நவ.21) காலை புல்டோசர்,ஜெபிஜி இயந்திரம் போன்றவற்றின் துணையோடு வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு எனக் கூறி வீடுகள் இடிக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருப்பதாகக் கூறும் அவர்கள், பெரும்பாக்கத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டால், குழந்தைகள் பள்ளிகள் செல்வதற்கு சிரமம் ஏற்படும் எனவும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர். கிரீம்ஸ் சாலை பகுதியிலேயே மாற்று வீடு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon