மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

ரிலையன்ஸிடம் விவரம் கோரும் டிராய்!

ரிலையன்ஸிடம் விவரம் கோரும் டிராய்!வெற்றிநடை போடும் தமிழகம்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக வழங்குமாறு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) கேட்டுக்கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தனது சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் இணைப்புகளுக்கு மாறத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அக்டோபர் மாதம் வரையிலான வாடிக்கையாளர்களின் விபரங்கள், 2G GSM மற்றும் CDMAவில் ப்ரீ-பெய்டு, போஸ்ட்- பெய்டு வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள், வழங்குமாறு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய ரூ.46,000 கோடி கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் அதன் வாய்ஸ் கால் மற்றும் இதர சேவைகளை வரும் டிசம்பர் 1 முதல் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் பங்குகளை விற்று ரூ.40,000 கோடி வரையிலான கடனை அடைத்தாலும் முழுமையான கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்புச் சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த நான்கு காலாண்டுகளாக வீழ்ச்சியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon