மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

காவிரி விவகாரம்: புதிய மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவிரி விவகாரம்: புதிய மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் எந்த ஒரு புதிய மனுவையும் ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றுவந்தது. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது காவிரி வழக்கு இறுதி விசாரணை தொடர்பான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் நடப்பாண்டிற்கான 63 டிஎம்சி தண்ணீரைக் காவிரியில் இருந்து திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்யத் தமிழக அரசு அனுமதி கேட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் புதிய மனுவை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (நவம்பர் 21) கூறியுள்ளார்.

“தினமும் 2000 கன அடி தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது போல் தண்ணீர் வழங்கப்படுகிறதா? அவ்வாறெனில் கூடுதலாக, 60 டிஎம்சி தண்ணீர் கேட்டு ஏன் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon