மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 22 நவ 2019

பறவை வளர்ப்புக் கருத்தரங்கு!

பறவை வளர்ப்புக் கருத்தரங்கு!

ஹைதராபாத் நகரில் நவம்பர் 22 முதல் பறவை வளர்ப்பு குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

11ஆவது இந்திய பறவை வளர்ப்புக் கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கு நவம்பர் 22 முதல் 24 வரை ஹைதராபாத் நகரத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தக் கண்காட்சியில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் வளர்ப்பில் உள்ள புதிய தொழில்நுட்ப அறிவு, உபகரணங்கள் பயன்படுத்தும் முறை, உற்பத்தியை அதிகப்படுத்துவது போன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து இந்திய பறவை வளர்ப்பு உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஹரிஷ் கர்வேர் கூறுகையில், "பறவை வளர்ப்பில் சிறந்த முறையில் உள்ளீடு செலவுகள் செய்து வந்தால் சர்வதேச அளவில் இந்தியா பறவை வளர்ப்பில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வருவாயும் அதிகமாகும். மேலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பறவை வளர்ப்புத் துறையை மேம்படுத்த முடியும். இறைச்சிகளின் தேவை ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 20 சதவிகிதம் உயர்ந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon