மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

வான்வெளியில் மர்ம பாதை!

வான்வெளியில் மர்ம பாதை!

பிரித்தானியா வான்வெளியில் தோன்றிய மர்ம பாதை தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

37 வயது மதிக்கத்தக்க ரேச்சல் நாசன் (Rachel Nason) என்ற பெண் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். இது உள்ளூர் நேரப்படி ஞாயிறு (19-11-17) காலை 7.30 மணியளவில் தன்னுடைய வீட்டிலிருந்து வானில் வினோத மாற்றம் ஏற்படுவதைக் கவனித்துள்ளார். பிறகு மேகக்கூட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து வானத்தை நோக்கிச் செல்வது போன்று இருந்துள்ளது, உடனடியாக இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக அழிவிற்கான எச்சரிக்கை, நாளை உலகின் முடிவாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி புகைப்படத்தோடு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சமூகவளைத்தளங்களில் வைரலாக பரவவே இது குறித்து , Planet X பூமியுடன் வந்து மோதப் போவதற்கான அறிகுறி என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். முப்பது நிமிடங்களில் வானம் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சிலர் விமான விபத்தினாலோ அல்லது விண்கற்கள் விழுந்ததன் விளைவாகவோ இது தோன்றியிருக்கலாம் எனவும் கூறிவருகின்றனர்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon