மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 நவ 2017

மகனை களமிறக்கும் மன்சூர் அலிகான்

மகனை களமிறக்கும் மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகானின் இயக்கத்தில் அவரது மகன் அலிகான் துக்ளக் கடமான்பாறை படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் மன்சூர் அலிகான். மேலும், சில படங்களை தயாரித்து இசையமைத்தும் உள்ளார். தற்போது மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் ஹீரோவாக நடிக்க உள்ளார். கடமான்பாறை என பெயரிட்டுள்ள இப்படத்தை மன்சூர் அலிகானே எழுதி, இயக்குகிறார்.

காட்டுக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அலிகான் துக்ளக்குக்கு ஜோடியாக அனுராகவி, ஜெனி ஃபெர்னாண்டஸ் அறிமுக நாயகிகள் இருவர் நடிக்கின்றனர். இதில் முக்கிய வேடத்தில் மன்சூர் அலிகானும் நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்து வரும் இப்படத்திற்கு மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் ஷூட்டிங் முழுவதும் ஆந்திராவில் நடைபெற்றத்தோடு மன்சூர் அலிகானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கென்னடி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon