மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

ரயில் ஏறிச் சென்ற பின்பும் உயிரோடு வந்த நபர்!

ரயில் ஏறிச் சென்ற பின்பும் உயிரோடு வந்த நபர்!

நாம் அனைவரும் படங்களில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடப்பது மற்றும் தண்டவாளத்திற்க்கு அடியில் இருந்து உயிரோடு வருவது போன்ற காட்சிகளைக் கண்டிருப்போம். ஆனால் இதுமாறியான சம்பவம் உண்மையாக நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ஒருவர் மிகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.

இவர் கடக்கும் போது பாதி வழியில் ரயில் எடுத்த காரணத்தால் அப்படியே ரயிலுக்குக் கீழ் படுத்து இருக்கிறார். இவர் எப்படி உயிர் தப்பினார் என்பது தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் 'டியோரியோ பங்காத்' என்ற ரயில் சந்திப்பில் இருந்த சரக்கு ரயில் ஒன்று புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலுக்கு கீழே சென்று ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கிறார்.

இவருக்கு ரயில் புறப்பட தயாராக இருந்த விஷயம் தெரியாமல் போய் இருக்கிறது. பல பேர் ரயில் எடுக்கப் போகிறது என்று சொன்னதையும் இவர் காதில் வாங்காமல் தைரியமாக ரயிலுக்கு அடியில் சென்று இருக்கிறார். ஆனால் அவர் உள்ளே சென்ற அடுத்த நொடி ரயில் புறப்பட்டு இருக்கிறது. உடனடியாக சுதாரித்த அவர் ரயிலுக்கு அடியில் அப்படியே படுத்து இருக்கிறார். ரயில் செல்லும் வரையில் ஆடாமல் அசையாமல் இருந்துள்ளார்.

ரயில் சென்ற பின் எவ்வித படபடப்பும், பயமும் இல்லாமல் அசால்ட்டாக வெளியே வந்த அவர் சட்டையை துடைத்துக் கொண்டு சிரித்து இருக்கிறார். தற்போது இவரின் 'தண்டவாள கிராஸிங்' வீடியோவாக வெளியாகி இருக்கிறது. மேலும் யூ டியூபில் ஒரே நாளில் வைரல் ஆகி இருக்கிறார்.

வீடியோ

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon