மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

சாம்சங் குரோம் புக் அப்டேட்!

சாம்சங் குரோம் புக் அப்டேட்!

சாம்சங் நிறுவனம் மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் கணினி மற்றும் வீட்டிற்கு தேவையான கருவிகளை தயாரித்து வருகிறது.

அதனடிப்படையில் புதிதாக குரோம்புக் என்ற புதிய லேப்டாப் ஒன்றினை அறிமுக செய்ய உள்ளது. அடுத்த ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவிருக்கும் CES 2018 என்ற விழாவில் சாம்சங் நிறுவனம் இந்த புதிய லேப்டாப்பினை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த புதிய சாதனத்தில் கழற்றக் கூடிய கீபோர்டு வழங்கப்படுகிறது.இதற்கு முன்னர் வெளியான குரோம்புக் வரிசையைப் போல் இல்லாமல் அதிக வசதிகளுடன் இந்த புதிய மாடல் வெளியாக உள்ளது.

தொடுதிரை வசதி கழற்றக்கூடிய கீ போர்டு என்பதால் இதனை லேப்டாப் ஆகவும், ஸ்மார்ட் டேப் போன்றும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்டெல் i5 ப்ராசெஸ்சர் மற்றும் 128 GB இன்டெர்னல் கொண்ட இந்த மாடலின் விலை ரூ.60000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாடல் மட்டுமின்றி இதனுடன் இறங்கு மாடல்கள் சிறு மாறுதல்களுடன் விற்பனைக்கு வெளிவர உள்ளது. இதனுடன் ஒரு டச் ஸ்க்ரீன் பென் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த புதிய கருவி பயனர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யுமா எனப் பொறுத்திருந்து காண்போம்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon