மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

தர்மயுத்தம் 2.0 :அப்டேட்குமாரு

தர்மயுத்தம் 2.0 :அப்டேட்குமாரு

தமிழ்நாட்டுல இன்னைக்கு தேதிக்கு சந்தோஷமா இருக்குறது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தான். டிசம்பர் 31க்குள் தேர்தலை முடிக்கனுன்னு சொல்லியிருக்குறதால, கிறிஸ்துமஸ், பொங்கல் செலவை கஷ்டப்படாம சமாளிச்சுடுவாங்க. வாங்கி ரெண்டு நாள் செலவழிச்சுட்டு அப்புறம் அஞ்சு வருசம் என்ன அரசாங்கம் இதுன்னு புலம்ப வேண்டியது. சரி அதுக்கு முன்னால ஆட்டத்தை கலைச்சுட்டா என்ன பண்ணுவாங்க. தர்ம யுத்தத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சுருச்சுன்னு வேற பேசிக்குறாங்க. இரண்டு மனங்கள் இணையவில்லைன்னு ட்விட்டர்ல வந்து ரொமாண்டிக்கா கண்ணீர் வடிச்சுட்டு போயிருக்கார் மைத்ரேயன். இங்க இவ்ளோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு அங்க என்னடான்னா ஜெயா டிவி கலைஞர் டிவியா மாறிடுச்சுன்னு ஜெயகுமார் பேட்டி கொடுத்துட்டு இருக்கார். அதுக்கு நம்ம ஆளுங்க காதுல இருக்குற தாமரையை எடுத்துட்டு பேசுங்க சார்ன்னு கலாய்ச்சுகிட்டு இருக்காங்க.

@itzVillan

மோடி விளைந்த கதிர் - வைரமுத்து #விளைந்த கதிர்னா அறுவடை செஞ்சிடவேண்டியதுதான் வேறு வழியில்லை....

@CreativeTwitz

ஓ.பிஎஸ், இ.பி.எஸ் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் முடிந்தது நான்காவது மாதம் தொடங்குகிறது - மைத்ரேயன் எம்.பி

விட்டா ஏழாவது மாசத்துலா வளைகாப்பு நடத்த சொல்லுவாங்க போல

@saravananucfc

உள்ளாட்சி தேர்தலில் தனியாகதான் நிற்போம் - சரத்குமார்

அப்பனா உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சதும் தனியாகதான் நிக்கனும் நாட்டாமை.

@CreativeTwitz

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை காக்க பாஜகவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் - அன்புமணி

// தைலாபுரத்துல லம்பா ஏதோ இருக்கு போலயே

@வாசுகி பாஸ்கர்

குஷ்பூ போன்ற நடிகையின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - செல்லூர் ராஜு

எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் Ph.D , லண்டன்ல பாரிஸ்டர் at law , எக்கனாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ், anthropology , ஹிஸ்டரி லாம் படிச்சிட்டா அரசியலுக்கு வந்தாங்க.

@Vinithan_Offl

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது எம்ஜிஆர் இன்னொரு முரசொலி ஆகிவிட்டது -அமைச்சர் ஜெயக்குமார்

தட்டி போட்டா வடை

அப்படியே போட்டா போண்டா

மொமெண்ட்

@Prabakar Kappikulam

அலோ... இன்கம்டாக்ஸ் ஆபிசரா..?

ஒடனே.. ஃபாஸ்ட்டிராக்ல நூறு வண்டிய எடுத்துட்டு ஓடிவாங்க...

இங்க, பக்கத்து வீட்டுல ஒருத்தன் வெங்காய சாம்பார் வச்சு சாப்டுதான்....

@mufthimohamed1

சிலிண்டர் வைத்திருந்தால் வறுமை கோட்டின் கீழ் இருந்து நீக்கம்-செய்தி

ஏனுங்ணா அடிக்கடி இப்படி ஷாக் குடுத்தா வர போற எலெக்ஷன்ல எவன் ஓட்டு போடுவான் ?

டேய் மணியா அந்த நேரத்துல இப்ப விட்ட அறிக்கைய ரத்து பண்ணி ரெண்டு இலவச பொருள குடுத்தா நாயி மாதிரி வாலாட்டிட்டு ஓட்ட போட்ருவாங்கடா

@Kozhiyaar

ஆசையா பேராசையா என்பது நம் பொருளாதார நிலையை பொறுத்தே அமைந்துவிடுகிறது!!!

@mufthimohamed1

இரண்டு இட்லி ஒரு வடை சாப்பிட்டு ஜி.எஸ்.டி.யை சோதித்தார் தமிழிசை-செய்தி

நல்ல வேலை பிரியாணி கடைக்கு போகல, போயிருந்தா கடை ஓனருக்கு சோதனை ஆயிருக்கும்..

@வாசுகி பாஸ்கர்

போலீசில் உடையில் இருக்கும் ஜோதிகா அசிங்கமான வார்த்தை பேசிய காட்சிக்கு இன்னும் எந்த போலீசும் "நாங்க அந்த மாதிரி எல்லாம் பேசவே மாட்டோம், எங்களை தவறா சித்தரிக்குறிங்க" ன்னு சொல்லவே இல்லை.

எப்படி சொல்வாங்க

@CreativeTwitz

"ஆர்.கே நகர் தொகுதியில் 45000 போலி வாக்காளர்கள் நீக்கம்" - தேர்தல் ஆணையம்

// இத வச்சு பாத்தா அக்கியூஸ்ட் நம்பர் 1 பிராடுத்தனம் பண்ணிதான் ஜெயிச்சிருக்கும் போல

@Prabakar Kappikulam

தமிழக அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது.

- ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்துகிறது.

- பாமக எம்பி அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டுல 17 கட்சி கூட்டணியின்னு சொன்னாங்க...

போறபோக்கப் பாத்தா முப்பது நாப்பது கட்சி தேறும் போல...

எல்லாம்வல்ல_இன்கம்டாக்ஸ்_ஆண்டவர்_துணை

@Meenamma Kayal

தவறு என்பதற்கு தனிப்பட்டசுதந்திரம் என்று புதுப்பெயர் சூட்டிக்கொள்கிறார்கள்.

Boopathy Murugesh

மோடி விளைந்த கதிர் - வைரமுத்து

திரும்ப கதிர் பத்தி பேசாதிங்க.. இப்ப தான் லெஷ்மி படத்த மறந்துருக்காய்ங்க..

@MohammedMastha

எங்களை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது- ஓபிஎஸ்

அப்புறம் ஏன் தியானம் பண்ணி என்ன மிரட்டி ராஜினாமா பண்ண சொன்னாங்கன்னு கதறுனீங்க??

@Kozhiyaar

கெட்டவர்களாக வாழ்பவர்களே வாழ்ந்து கெட்டவர்களாக மாறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது!!!

@CreativeTwitz

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது எம்ஜிஆர் இன்னொரு முரசொலி ஆகிவிட்டது -அமைச்சர் ஜெயக்குமார்

அம்மா இறந்த பிறகு அதிமுக காரன் பிஜேபி ஆ மாறும் போது நமது எம்.ஜீ.ஆர் , முரசொலி ஆ மாறுனா என்ன தப்பு???

@ajay_aswa

“நம்பி வந்தோம் நடுத்தெருவில் நிற்கிறோம்!”.. கொதிக்கும் மைத்ரேயன் எம்.பி!

நம்ம தலைவர் கிட்ட சொல்லி இன்னொரு தர்மயுத்தத்துக்கு ரெடி பண்ண சொல்ல வேண்டியதுதானே.

@Tamil_Zhinii

சிங்கத்தை விட மாடுகளை கண்டுதான் மக்கள் அதிகம் பயப்படுகின்றனர் -லாலு பிரசாத் யாதவ்

சும்மா இருக்க மாட்டுக்கு கொம்பு சீவி வம்புல மாட்டிக்காதீங்க...

@Thaadikkaran

அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா யாரும் இல்லடா என்பது அதிமுகவிற்கு எழுதப்பட்ட பாடலாக இருக்கக்கூடும்..!!

@vickytalkz

ஜெ.மறைவுக்குப் பின் நமது எம்ஜிஆர்,இன்னொரு முரசொலி ஆகிவிட்டது:அமைச்சர் ஜெயக்குமார்

இரட்டை இலை கூட தாமரை ஆகிவிட்டது அமைச்சரே..!

@senthilcp

இதுவரை லஞ்சம் வாங்கவே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரால் சொல்ல முடியுமா? - சாருஹாசன்

சாரி , தொழில் ரகசியத்தை வெளியில சொல்ல முடியாது

@வாசுகி பாஸ்கர்

நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று அழுதாவது கமலால் இங்கு விஸ்வரூபத்தை வெளியிட்டு விட முடியும், ஆனால் ஒரு போதும் மருதநாயகத்தை எடுக்கவே முடியாது என்பதற்கு, நாடு தழுவிய பத்மாவதி படத்திற்கு எழும் எதிர்ப்பும், நெருக்கடியுமே சாட்சி!

-லாக் ஆஃப்

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon