மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 10 டிச 2019

ஒலிம்பிக் : தகுதிபெற்ற இந்திய வீரர்!

ஒலிம்பிக் : தகுதிபெற்ற இந்திய வீரர்!

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றன.அதன்படி அடுத்த வருடம் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரிற்கு இந்திய வீரர் சிவ கேசவன் தேர்வாகி உள்ளார்.

லூஜ் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் மூன்று முறை ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வியஸ்மன் உலக கோப்பையில் விளையாடி வரும் சிவ கேசவன் அதிக புள்ளிகளைப் பெற்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். தென்கொரியாவின் பியாசங் என்ற நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்தியர் சிவ கேசவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் பேசுகையில், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பையில் இன்னும் 5 தொடர்களில் விளையாட வேண்டும். ஆனால் இனி மிகவும் நிதானமாக விளையாடுவேன். அடுத்து விளையாடும் 4 வாரங்களுக்கும் உங்கள் ஆதரவை எனக்கு தர வேண்டும் என கூறினார்.இதற்கு முன்னர் 5 முறை ஒலிம்பிக் தொடரிற்கு இவர் தகுதிபெற்றுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon