மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தினகரன் சுற்றுப்பயணம்!

தினகரன் சுற்றுப்பயணம்!

வரும் 24ஆம் தேதி முதல் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவருடைய ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைப்புக்காக அமைச்சர்களுக்கு தினகரன் விடுத்திருந்த கெடு, கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அதையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தொண்டர்களை சந்திக்கவும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் சில காரணங்களுக்காக அது ரத்து செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 21) சென்னை அடையாறிலுள்ள தினகரன் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்," வரும் 24ஆம் தேதி முதல் வேலூர், திருச்சி, சேலம் மண்டலங்களில் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார், பயணத்தில் மண்டலம் வாரியாக ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகளுடன் உரையாட உள்ளார் என்று தெரிவித்தவர், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையை கைப்பற்றுவோம் என்று எடப்பாடி அணியினர் அறிவித்துள்ளனர். தங்களைப் பற்றி செய்தி போட ஆள் இல்லாததால் இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர்" என்றும் கூறினார்.

மேலும் அவர் அதிமுக அணிகள் இணைவுக்குப் பின்னர் இருக்கும் சூழல் குறித்த மைத்ரேயன் பதிவு பற்றி பேசிய அவர், "மைத்ரேயன் மனதில் 6.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், மைத்ரேயன் மனதில் மட்டுமல்ல அங்கிருக்கும் எல்லோருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் வரும்" என்றும் கூறியுள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon