மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 29 நவ 2020

முரசொலி ஆகிவிட்டது நமது எம்ஜிஆர்!

முரசொலி ஆகிவிட்டது நமது எம்ஜிஆர்!

நமது எம்ஜிஆர் பத்திரிகை முரசொலி பத்திரிகையாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில், இன்று(நவம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளோம். இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் என தெரிவித்தார்.

அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்ற மைத்ரேயனின் கருத்துக்குப் பதிலளித்த அவர், “ மைத்ரேயன் கருத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது, என்னை பொறுத்தவரையில் அதிமுகவில் எந்த கருத்துவேறுபாடும் இல்லை அதேவேளையில், எந்த பிரச்னை என்றாலும் கட்சிக்குள் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர பொதுவெளியில் அல்ல” என்று குறிப்பிட்டார்.

மேலும், நமது எம்ஜிஆர் பத்திரிக்கை முரசொலி பத்திரிக்கையாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டது. துரைமுருகனின் பேட்டி ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டதில் இருந்தே திமுகவுடன் அவர்கள் எந்த அளவு கூட்டணி வைத்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளலாம் என கூறிய ஜெயக்குமார், “ ஆளுநர் ஆய்வு செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவே அவரும் குறிப்பிட்டுள்ளார் என்று விளக்கமளித்தார்.

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னரே உண்மை தெரியவரும் என்று தெரிவித்தார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon