மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 நவ 2017

முட்டை விலை தொடர்ந்து உயர்வு!

முட்டை விலை தொடர்ந்து உயர்வு!

உற்பத்திக் குறைவு காரணமாகக் கோழி முட்டை விலை 40 சதவிகிதம் வரை உயர்ந்து, நாடு முழுதும் சில்லறை வணிகத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.7 முதல் 7.50 வரை விற்பனையாகி வருகிறது என இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ரூ.4.50க்கு கீழ் விற்கப்பட்டு வந்த கோழி முட்டை தற்போது 40 சதவிகிதம் வரை விலை உயர்ந்து ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலை நாடு முழுவதும் நிலவுகிறது. இதுகுறித்து இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் கட்ரி கூறுகையில், "நாடு முழுவதும் முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் அதன் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. டெல்லியில் முட்டை ஒன்றின் விலை ரூ.7.50 ஆக உள்ளது. மற்ற நகரங்களிலும் முட்டை விலை அதிகமாகவே உள்ளது. முட்டை உற்பத்தி 30 சதவிகிதம் வரை குறைந்துள்ளதே அதன் விலை உயர்வுக்குக் காரணமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-16ஆம் ஆண்டில் முட்டை உற்பத்தி 8,300 கோடியாக இருந்தது. 2016-17ஆம் ஆண்டில் உற்பத்தி இதைவிடக் கூடுதலாக இருந்தது.முட்டை உற்பத்திச் செலவு ரூ.3.50 ஆக இருந்த நிலையில், உற்பத்தி விலைக்கே விற்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இதனால் பலர் பண்ணைகளை மூடி விட்டனர். இதனால் சில மாதங்களாகவே முட்டை உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவே முட்டை விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில மாதங்களுக்கு உற்பத்தி உயர வாய்ப்பில்லை. எனவே முட்டை விலையும் உடனடியாகக் குறையாது" என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon