மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்!

இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்!

இந்தியா மீண்டும் ஆண்டுக்கு 8.5 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியைப் பெறுவதற்கான தனது சக்தியை உணர்ந்து, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடன் பெறும் தகுதிக்கான மதிப்பீட்டை சில தினங்களுக்கு முன்னர் மூடிஸ் நிறுவனம் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதாக மத்திய அரசு சார்பாகவும், பாஜக சார்பாகவும் முழக்கங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து மிண்ட் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “வாராக் கடன் பிரச்னை மற்றும் சர்வதேச அளவில் நிலவும் கடும் போட்டியையும் சமாளித்து இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். சமீபத்தில் இந்திய வங்கிகளுக்கு மூலதனம் அறிவிக்கப்பட்டது ஒரு துணிச்சலான முடிவாகும். வங்கிகளுக்கான வாராக் கடன் சுமை குறையும் பட்சத்தில் வங்கிச் செயல்பாடுகள் சிறப்பாகும்.

ஜூலையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சட்டம் இந்தியாவின் கூட்டாட்சி அரசியலின் வரவேற்கத்தக்க மறு வடிவமைப்பாகும். இது வரும் காலங்களில் உருவாகும் வளர்ச்சிக்கான சவால்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும். இந்தியாவின் எதிர்காலம் இதுபோன்ற கூட்டாட்சி நடைமுறைகளாலேயே நீடித்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி இணக்கத்துக்கான சுமைகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் விநியோக சங்கிலியில் இருந்த தடைகள் குறைக்கப்பட்டுள்ளன. மறைமுக வரிகளை ஒழுங்குபடுத்த ஜிஎஸ்டி இருப்பதுபோல், மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிதி ஆயோக் அமைப்பு உள்ளது” என்றார்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon