மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

பெண்களுக்கான ஸ்மார்ட் டாய்லெட்!

பெண்களுக்கான ஸ்மார்ட் டாய்லெட்!

உலகக் கழிவறை தினத்தையொட்டி கேரளாவில் பெண்களுக்கான ஸ்மார்ட் டாய்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் தேதி உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டிகேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 12 லட்ச ரூபாய் செலவில் பெண்களுக்கான ஆட்டோமேட்டிக் கழிவறை திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் கழிவறையில் நாப்கின் வென்டிங் மெஷின், நாப்கினை சாம்பலாக்கும் மெஷின், அமர்வதற்கு இருக்கை, மின் விசிறி, முகம் பார்க்கக் கண்ணாடி, குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தனியிடம் என ஒரு பெண்ணுக்கும் குழந்தைக்கும் ஓய்வறையில் தேவைப்படும் அத்தனை விஷயங்களும் இந்த ஆட்டோமேட்டிக் டாய்லெட்டில் இருக்கின்றன.

இவையனைத்தும் அதற்கான ரூபாய் காயினை மெஷினில் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். இதைத் திறந்துவைத்த திருவனந்தபுரத்தின் துணை மேயர் ராக்கி ரவிக்குமார், ''பெண்களும் குழந்தைகளும் அதிகமாக வரும் இடங்களில் இதுபோன்ற ஸ்மார்ட் டாய்லெட் அமைத்த விஷயத்தில், இந்தியாவுக்கே திருவனந்தபுரம் முன்னோடியாக இருக்கிறது'' என அவர் தெரிவித்தார்.

இந்த டாய்லெட்டிற்கு ஸ்மார்ட் ஷீ டாய்லெட் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon