மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

ரிச்சி மறக்க முடியாத அனுபவம்!

ரிச்சி மறக்க முடியாத அனுபவம்!

மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரதா ஸ்ரீநாத். இவர் விக்ரம் வேதா, இவன் தந்திரன் படங்களின் வரிசையில் தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் ரிச்சி. இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் குறித்து சமீபத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ரிச்சியின் படப்பிடிப்பு முழுவதும் தனியாக நான் போராட வேண்டியிருந்தது. அப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்டது. திடீரென சந்தையில் இருந்து மீனின் துர்நாற்றம் வீசியது. நான் அசைவ உணவுகளை சாப்பிடுவேன் என்றாலும் அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. நான் என் குழந்தை பருவத்தில் ஒரு இறால் சாப்பிட்ட போது, ​​அது என் தொண்டையில் சிக்கியது. அதிலிருந்து கடல் உணவுகள் எனக்கு பிடிக்காமல் போய் விட்டது. இன்னும் சொல்லப்போனால் நான் இந்த படப்பிடிப்பு தளத்தில் தான் முதன் முறையாக காரக்குழம்பு சாப்பிட்டேன்” என்று தன் அனுபவத்தை கூறியுள்ளார்.

தன்னுடன் பணிபுரிந்த நிவின் பாலி பற்றி கூறிய ஷ்ரதா, “எனக்கு நிவின் பாலியை ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் அவரை சந்தித்தது கிடையாது. ஒரு நாள் குற்றாலத்தில் படபிடிப்பு நடக்கும் போது நான் என் டயலாக்கை படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது நிவின் அந்த பக்கமாக சென்றார். ஆனால் அவர் என்னை பர்ர்க்கவில்லை. அதற்கு பிறகு இயக்குநர் தான் அவரிடம் என்னை அறிமுகம் செய்தார். நான் நிவினுடன் நடிப்பதில் ஆர்வமாக இருந்தேன். ஆனாலும் மிகவும் அமைதியாக நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ரிச்சி எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை என்னால் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon