மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

டைட்டில் ரெடி, ஹீரோயின் எங்கே?

டைட்டில் ரெடி, ஹீரோயின் எங்கே?

கொடிவீரன் திரைப்படத்தை தொடர்ந்து சசிக்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இயக்குநராக திரைத்துறைக்குள் அறிமுகமானாலும் இரண்டு படங்களோடு அந்த பக்கமே போகாமல் நடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் மும்முரமாக இயங்கிவருகிறார் சசிகுமார். தன்னை வைத்து ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில், ‘கொடிவீரன்’ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார் சசிகுமார். பூர்ணா, சனுஷா, மகிமா நம்பியார் என மூன்று கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதில், சசிகுமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, சசியின் தங்கையாக சனுஷா நடித்துள்ளார். வில்லியாக நடித்துள்ள பூர்ணா, இந்தப் படத்துக்காக மொட்டை போட்டு நடித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மருது பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இந்தப் படத்துக்கு, ‘அசுர வதம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தை இயக்கிய மருது பாண்டியன், இரண்டாவதாக இயக்கும் படம் இது. ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில் லீனா லலித்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon