மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

நம் ராமானுஜர்!

 நம் ராமானுஜர்!

விளம்பரம்

ராமானுஜரின் திருமேனி திருபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் கி.பி. 1136 ஆம் ஆண்டு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆம் அந்த ஆண்டு தை மாசம் பூச நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தன்று கந்தாடை ஆண்டானால் திருபெரும்புதூரில் நிறுவப்பட்டது உடையவர் சிலை. அப்போதில் இருந்து உடையவரின் உடல் நிலை தளரத் தொடங்கியது என்கிறார்கள். ஆனபோதும் உடையவரின் செயல்பாடுகளில் எந்தத் தொய்வும் இல்லை.

தை மாதம் புனிதமான மாதமாகும். ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் கூடிவரும் நன்னாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசத்தை முருகனுக்கு உகந்ததாகவே இதுவரை அறிந்திருக்கிறோம். ஆனால்வைணவ திருக்கோயில்களில் திருபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மட்டும்தான் தைப்பூசம் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இது குருபுஷ்யம் அல்லது குரு பூசம் என அழைக்கப்படுகிறது. அதாவது 1136 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு தைப்பூசமும் திருபெரும்புதூர் கோயிலில் திருவிழாதான். ஸ்ரீராமானுஜரின் தானுகந்த திருமேனி என்ற விக்ரகம் நிறுவப்பட்டதில் இருந்து இன்றுவரை ராமானுஜரை நேரில் பார்ப்பது போலவே இந்த விக்ரகத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

வைணவர்களின் குரு ராமானுஜர் என்பதாலும் அவரது சிலை நிறுவப்பட்ட நட்சத்திரம் பூசம் என்பதாலும் குருபுஷ்யம் என்று அழைக்கப்படுகிறது.

இதுபற்றி திருபெரும்புதூர் பக்தர்கள் சிலாகிக்கிறார்கள்.

’’அந்நாள்களில் ராமானுஜர் தினமும் சந்நிதியில் இருந்து புறப்பாடாகி உப சந்நிதிகளில் மங்களாசாசனம் செய்வார். பின்னர் வீதி புறப்பாடாகி அவதார ஸ்தலத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் சேவை சாற்றுமுறை ஆகி மீண்டும் மாலை வீதி புறப்பாடாகி சந்நிதி எழுந்தருளி ஏகாந்த சேவை தரிசனம் கிடைக்கும். குருபுஷ்யத்தில் ஒருநாள் ராமானுஜரை தரிசனம் செய்தால் ஒரு வருடம் முழுவதும் திருவாதிரையில் ராமானுஜரை தரிசனம் செய்த பலன் கிடைக்கும்’’ என்கிறார்கள்.

ராமானுஜரை எப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதற்கு திருபெரும்புதூர் மட்டுமே உதாரணம்.

இங்கே உள்ள தாமுகந்த மேனி அதாவது ராமானுஜர் தன் திருமேனியால் இந்த சிலையைத் தழுவிக் கொடுத்ததால்...இது தாமுகந்த மேனி என்று அழைக்கப்படுகிறது. அதாவது ராமானுஜருடைய மேனியாகவே இதைப் பார்க்கிறார்கள்.

அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் தீபாவளி முதல் தை மாதம் வரை குளிர் காலம் என்பதால் தினந்தோறும் ராமானுஜரின் திருமேனிக்கு வெந்நீரில்தான் திருமஞ்சனம் செய்கிறார்கள். ராமானுஜருக்கு குளிரும் என்பதால் குன்சம் என்றொரு பாதம் வரை மூடும் ஆடையை அணிவிக்கிறார்கள். உல்லன் போன்ற கவசங்களையும் அணிவிக்கிறார்கள்.

அதுவே கோடை காலம் என்றால் ராமானுஜரை எப்படி கவனிக்கிறார்கள் தெரியுமா?

மாசி முதல் புரட்டாசி வரை ராமானுஜரின் திருமேனி புழுக்கத்தால் வியர்க்காமல் இருக்க இந்த மாதங்களில் சந்தனக் காப்பிடுகின்றனர்.

இவ்வாறு இன்று வரை ராமானுஜர் ஏதோ அமர்ந்து உபதேசம் செய்வது போலவே எண்ணி அவரது திருமேனியை அவ்வளவு கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள் திருபெரும்புதூரில்.

ராமானுஜரை நாமெல்லாம் நேரில் பார்த்திருக்க வேண்டுமென்றால் நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டும். இப்போது பிறந்த நாம் எப்படி பார்ப்பது? திருபெரும்புதூருக்குச் சென்று பாருங்கள். அங்கே ராமானுஜர் இருக்கும் அழகும் கம்பீரமும், பாங்கும் அப்படியே நேரில் பார்ப்பது போலவே இருக்கும்.

​ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்கள் செய்து வரும் ராமானுஜ தொண்டு ரகம் ரகமாய் விதம் விதமாய் விரிந்துகொண்டிருக்கிறது. தமிழ் கூறும் உலகம் எங்கிலும் வைணவ விதைகள் விதைத்து பாசுரப் பாசனம் செய்து அரங்கனின் அருளை அறுவடை செய்ய அரும்பாடுபடுகிறார் ஜெகத்ரட்சகன்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon