மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

டெல்லிக்குப் பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

டெல்லிக்குப் பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான செயல்திட்டத்தை டிசம்பர் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தேசியப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் காற்று மாசுபாட்டினால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கினர். காற்று மாசுபாட்டினால் மக்கள் முககவசம் அணிந்துகொண்டு செல்லுமளவுக்குச் சூழல் மாறியது. 200 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கக் கோரி தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி பசுமை தீர்ப்பாய நீதிபதி சுவதந்தர் குமார் விசாரித்தார்.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில், அடுத்து ஏழு நாள்களுக்குக் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும், கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்படுகிறது என்றும் தேசியப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 4) டெஸ்ட் கிரிக்கெட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச அணி ஒன்று மாசைக் கட்டுப்படுத்தும் முக கவசங்களை அணிந்து விளையாடியது இதுவே முதன்முறை ஆகும். டெல்லியில் கடுமையான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதில் இருசக்கர வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை... பொது போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என தீர்ப்பாயம் கேள்விகள் எழுப்பியது. அரசு கலந்துரையாடல் மட்டுமே நடத்துகிறது. எந்தவித நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. 48 மணி நேரத்துக்குள் (டிசம்பர் 6) காற்று மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியல்களைச் சமர்ப்பிக்கவிட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon