மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 அக் 2020

ஜெயம் ரவி தேர்ந்தெடுத்த ‘அடங்கமறு’!

ஜெயம் ரவி தேர்ந்தெடுத்த ‘அடங்கமறு’!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளின் பாதுகாவலன் என்றால் அது ஜெயம் ரவிக்கு முழுவதுமாகப் பொருந்தும். தொடக்கத்திலிருந்தே தனது திரைப்படங்களின் லிஸ்ட்டில் அப்படி பல முயற்சிகளைச் சேர்த்திருக்கிறார்.

இதோ, இப்போது ‘அடங்கமறு’ திரைப்படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது. கார்த்திக் தங்கவேலு எனும் புதுமுக இயக்குநருடன் தனது 24ஆவது திரைப்படத்துக்குச் சேர்ந்திருக்கிறார் ஜெயம் ரவி. அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார், சாம்.சி.எஸ். இசையமைக்கிறார், ரூபன் எடிட் செய்கிறார், லால்குடி என்.இளையராஜா கலை இயக்குநராக பணியாற்றுகிறார் என்பது வரையிலும் தெரிவித்துவிட்டு டைட்டிலை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தார்கள்.

இப்போது இந்தத் திரைப்படத்தின் டைட்டில் ‘அடங்கமறு’ என வைக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசியலையும், அதைக் காத்திரமாக விமர்சிக்கும் வகையிலும் இதன் கதைக்கரு அமைக்கப்பட்டிருப்பதாக விசாரித்தபோது தெரியவந்தது. டைட்டிலுக்கேற்ற கதைதான்.

வியாழன், 14 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon