மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

பியூட்டி ப்ரியா: ஆண்களின் ஆடை தேர்வு!

பியூட்டி ப்ரியா: ஆண்களின் ஆடை தேர்வு!

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினாலும் கூந்தல் இழப்பு ஏற்படுமா, பயன்படுத்தவே கூடாதா எனச் சிலர் கேட்டிருந்தனர். பயன்படுத்தவே கூடாது என்றில்லை. மிக அவசியம் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிக கெமிக்கல்கள் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அடுத்ததாக ஆடை விஷயங்களில் ஆண்களின் தெரிவு மிகச் சரியானதாக இருக்க வேண்டும். பெண்களிடம் சிற்சில ஐடியாக்களைக் கேட்டால் அவர்களே பதில் சொல்லுவார்கள். முடிந்தால் உங்களுக்கான ஆடையைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் தோழியுடனோ அல்லது மனைவியுடனோ சென்றால் நேரமும் பணமும் மிச்சமாகும்.

ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில்கொள்ள வேண்டும்.

நண்பர்களுடன் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது. நெருங்கிய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குப் போகும்போது சேர்வானி டிரஸ் நன்றாக இருக்கும். சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக t-shirt அணிந்தால் கேஷுவலாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டு வேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன்.

ஆடைகள் வாங்கும்போது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட் பிங்க், லைட் ப்ளூ, லைட் எல்லோ போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லதாக இருக்கும்.

அடுத்ததாக, உள்ளாடைகள் தேர்வு செய்யும்போதும் அதிக கவனம் தேவை. அதிக இறுக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை அணிவது எப்போதும் நல்லது.

கல்லூரிக்குப் போகும் ஆண்களாக இருந்தால், t-shirt போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டால் அசத்தலாக இருக்கும்.

இதுபோல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக் கூடு, மண்டை ஓடை, சைக்கிள் செயின் அணிய வேண்டாம். இது இளம் பெண்களின் பார்வைக்குச் சற்று வேண்டாததாகவே தோன்றும்.

செவ்வாய், 20 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon