மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

நாமக்கல் முட்டை விலை சரிவு!

நாமக்கல் முட்டை விலை சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் குறைந்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி (நேற்று) தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சென்ற வாரம் ரூ.3.95 ஆக இருந்த முட்டையின் விலை ரூ.3.80 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் முட்டை விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஹைதராபாத், விஜயவாடா போன்ற இடங்களில் நாமக்கல் மண்டலத்தை விடக் குறைவான அளவில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற மண்டலங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட முட்டையின் விலை விபரம்:

ஹைதராபாத் ரூ.3.55, விஜயவாடா ரூ.3.75, பர்வாலா ரூ.3.50, மும்பை ரூ.4.10, மைசூர் ரூ.3.98, பெங்களூரு ரூ.3.95, டெல்லி ரூ.3.90, கொல்கத்தா ரூ.4.22, சென்னை ரூ.4.10 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி, 23 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon