மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 பிப் 2018

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்-5!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்-5!

இராமானுஜம்

டிஜிட்டல் ஆபரேட்டர்களால் சினிமா தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றனர். பலம் கொண்ட யானையைச் சிறு அங்குசம் மூலம் பாகன் கட்டுப்படுத்துவது போல், கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர், அதனை விலை கொடுத்தும் வாங்கும் விநியோகஸ்தர்களைக் கட்டுப்படுத்தும் கருவியாக டிஜிட்டல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவர்களைக் கட்டுப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நமது தயாரிப்பைத் திரையரங்குகளில் எப்போது, எப்படி, என்ன கட்டணத்தில் திரையிடுவது என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறும் தயாரிப்பாளர்கள் நாளை முதல் தென் இந்தியா முழுவதும் புதிய படங்களைத் திரையிடுவதில்லை என அறிவித்துள்ளனர். இந்த முடிவுக்குத் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதால் திரையரங்குகள் மூடப்படும் எனக் கூறப்படுகிறது.

தியேட்டர்கள் வசூல் குறைந்து தடுமாற்றத்தில் இருந்தபோது படங்கள் திரையிட நவீன புரொஜக்டரை நாங்கள் குறைந்த விலையில் தருகிறோம், ஒலி, ஒளி அமைப்பு சிறப்பாக இருக்கும் என டிஜிட்டல் நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதியைப் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.

புறக்கணித்தவர்களைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சம்மதிக்க வைத்தனர். தியேட்டர்களுக்கு அனுப்பபடும் ஒரு பிரிண்ட்டுக்கு ரூ. 65000 முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்ய வேண்டியது தயாரிப்பாளரே. பிரின்ட் தயாராகி தியேட்டர்களுக்கு அனுப்பி வைப்பது பெரிய வேலை.குறித்த நேரத்தில் தியேட்டருக்கு போய் சேரத் தவறும் பட்சத்தில் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

50 முதல் 100 தியேட்டர்கள் வரை தயாரிப்பாளரின் வசதி, பட வியாபாரம் ஆகியவற்றைப் பொறுத்துப் படங்கள் ரீலீஸ் ஆகும். டிஜிட்டல் முறையில் ஒரு தியேட்டருக்கு அறிமுகமானபோது ஒரு பிரிண்ட்டுக்கு 6800 ரூபாய் மட்டுமே செலவுசெய்து 15 தியேட்டர்களில் ரீலீஸ் செய்ய முடிந்தது. பழைய முறையில், பிரின்ட் சேதாரம் ஆனால் புதிய பிரின்ட் போட வேண்டும்.

டிஜிட்டல் முறையில் காலதாமதம், சேதாரம் கிடையாது, இரண்டாவது மூன்றாவது வாரங்களில் கட்டணம் குறைந்துகொண்டே வரும். பிரின்டைப் போல இதைப் பாதுகாக்க வேண்டியதில்லை. இதனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்க மறுத்தவர்களைத் தயாரிப்பாளர்கள் சம்மதிக்கவைத்தனர்.

குறிப்பிட்ட அளவு தியேட்டர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த டிஜிட்டல் நிறுவனங்கள் முதல் கட்டமாக வெளிவர உள்ள படங்களின் டிரைலரைப் படம் தொடங்கும் முன் தியேட்டர்களில் வெளியிடும் வேலையைச் செய்தன. அதற்குத் தயாரிப்பாளர்களிடம் கட்டணம் வசூலித்தன. அதில் பங்கு கேட்ட தியேட்டர்காரர்களிடம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச புரொஜக்டர், பல்பு ஆகியவற்றுக்கு இது போன்ற விளம்பர வருவாய் மூலம் செலவை ஈடுகட்ட வேண்டியுள்ளது என கூறி சமாளித்தனர். அப்போதே அது பற்றி யோசிக்க வேண்டிய தியேட்டர் உரிமையாளர்கள் நம்மிடம் பணம் கேட்காமல் என்ன வேண்டுமானாலும் போட்டு கொள்ளட்டும் என மவுளனம் காத்ததனர். தங்கள் படங்களை ரீலீஸ் செய்யும்போது பிற ட்ரைலர்களை வெளியிட்டு டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பதை இரு தரப்பும் தொலைநோக்குப் பார்வையுடன் அணுகாததன் விளைவாகப் படங்கள் படங்கள் சேமித்து வைக்கும் சேமிப்பு வங்கியாக டிஜிட்டல் நிறுவனங்கள் மாறத் தொடங்கின. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் வசம் பாதுகாப்பாக இருந்த ‘கண்டென்ட்’, டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் போனது. இது முதல் சறுக்கலாக அவர்களுக்கு அமைந்தது.

அடுத்த சறுக்கல் - நாளை...

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 28 பிப் 2018