மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

தினம் ஒரு சிந்தனை: தடைகள்!

தினம் ஒரு சிந்தனை: தடைகள்!

தடைகள் எப்போது தெரியும் என்றால் உன் லட்சியத்திலிருந்து உன் பார்வை விலகும்போதே.

- ஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947). ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தை உருவாக்கிய அமெரிக்க நிறுவனர். இவர் கார்களை அசெம்பிளி லைன் முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடித்து, செய்தும் காட்டினார். இவருக்கு, 161 ஐக்கிய அமெரிக்கக் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் இவர் உலகின் பணக்காரர்களில் ஒருவரும், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவராகவும் கருதப்படுகிறார். ஹென்றி ஃபோர்ட் தனது பெயரிலேயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்தவர். ‘டிசைன் இன்ஸ்டிட்யூட்’ என்ற அமைப்பை உருவாக்கிப் பல்வேறு சமூக நலப் பணிகளுக்காகத் தன் சொத்தில் பெரும்பங்கைச் செலவழித்துள்ளார்.

சனி, 3 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon